Published : 12,Jul 2022 07:51 AM
சீர்காழி: சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 2000 சாராய பாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

காரைக்காலில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட 2000 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு அதிக அளவில் புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வருவதாக காவல்துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்த, அதன் பேரில் வள்ளுவகுடி சாலையில் சீர்காழி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இருசக்கர வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இதில், காரைக்காலில் இருந்து 2000 சாராயம் பாட்டில்களை சொகுசு காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது,
இதனை அடுத்து பாண்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கூத்தியம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர், மேலும் 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள்யும் பறிமுதல் செய்தனர்,