Published : 20,Jun 2022 02:15 PM
தாம்பரம்: காணாமல்போன வயதான பெண் வனப்பகுதியில் எலும்புக் கூடாக மீட்பு

தாம்பரம் அருகே காணாமல்போன வயதான பெண் வனப்பகுதியில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி ஏஞ்சலின் என்பவர் தனது தாயார் எஸ்தர் (55) என்பவரை காணவில்லை என சேலையூர் காவல் நிலையத்தில புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரபாக்கம் வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காடு பகுதியில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் 55 வயதுடைய எஸ்தர் என்பதும் அவர் அகரம் தென் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார், மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.