[X] Close

புரோ கபடி லீக்: அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்!

Pro-Kabaddi-2017--Tamil-Thalaivas-Pip-UP-Yoddha-34-33

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் உபி அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஹரியானா மாநிலம் சோனிபேட்டில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, உத்தரப் பிரதேச யோதா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் உ.பி. யோதா அணி முன்னணியில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒரே ரெய்டில் 3 புள்ளிகள் எடுத்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இது தமிழ் தலைவாஸ் அணியின் 2-வது வெற்றியாகும். தமிழக அணியில் அஜய் தாகூர், பிரபஞ்சன் ஆகியோர் தலா 8 புள்ளிகள் எடுத்தனர். உத்தரப் பிரதேச அணியில் நிதின் தோமர் 14 புள்ளிகள் குவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close