பரமக்குடியில் சசிகலா ஆதரவாளரின் காரை தீவைத்து எரித்த வழக்கில் அதிமுக வார்டு செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா. சசிகலா இவரிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து கடந்த ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் காரை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் கார்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையில் பரமக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்த அதிமுக 34வது வார்டு செயலாளர் மணிகண்டன் (33) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசியல் முன்விரோதம் காரணமாக வின்சென்ட் ராஜாவின் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் உடனிருந்த கூலி ஆட்கள் 6 பேரை தேடி வருகின்றனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்