Published : 30,Mar 2022 10:28 PM

ரஷ்யாவின் ‘ரூபிள் -இந்தியாவின் ‘ரூபாய் பரிமாற்றத்திற்கு புதிய சிஸ்டம் கொண்டு வரும் ரஷ்யா?

russian-ruble-indian-currency-exchange-russia-introduces-new-system-what-is-india-s-decision

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போரிட்டு வரும் சூழலில் உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக உலக நாடுகளுக்கிடையே பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள உதவும் ஸ்விஃப்ட் வலைதள சேவை பயன்பாட்டிலிருந்து ரஷ்யாவின் 7 வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் ரஷ்ய சர்வதேச அளவில் வணிகம் மேற்கொள்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 

இத்தகைய சூழலில் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பண பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கில் ரஷ்யா ஒரு புதிய சிஸ்டத்தை கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரூபாய் – ரூபிள் பரிமாற்றம் சுலபமாக மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது. இந்தியா ரஷ்யாவின் முன்மொழிவு குறித்து ஒரு முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல். 

இது நடைமுறைக்கு வந்தால் இந்திய வங்கியில் செலுத்தப்படும் ரூபிள், ரூபாய்களாக மாறும் என்றும். இதே போல ரஷ்ய வங்கியில் செலுத்தப்படும் இந்தியா ரூபாய், ரூபிளாக மாறும் என்றும் தெரிகிறது. இருந்தும் இது குறித்த இறுதி முடிவு எடுப்பது குறித்து இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய லாவ்ரோ உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. 

இந்தியா ரஷ்யாவிடமிருந்து தேச பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அதே போல எண்ணெய் வாங்கவும் உள்ளதாக தெரிகிறது. இதற்கு இந்த ரூபிள் - ரூபாய் நேரடி பரிமாற்றம் பெரிதும் உதவும் என தெரிகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்