டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்கொள்கிறது.
மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரை இறுதியை உறுதி செய்து விடும். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில், தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை குறித்து இந்தியா சிந்திக்க முடியும். இதனால் அந்த ஆட்டம் வாழ்வா சாவா என அமைந்துள்ளது. அதுதவிர மேலும் 2 லீக் ஆட்டங்கள் இந்தியாவுக்கு உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிக்க: ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்