காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
கடப்பாக்கம் அருகேயுள்ள ஆலம்பராக்கோட்டையில் நேற்று சினிமா படப்பிடிப்பு நடந்துள்ளது. அதற்காக மீனவர்களின் ஒரு பிரிவினரிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட மோதலில் கடப்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஆலமரக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில், ராமகிருஷ்ணன், சேகர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 6 மீனவர்கள் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 படகுகள், 50 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால், மின்னணு சாதனங்கள் தீக்கிரையாகின. மோதல் நடைபெற்ற பகுதியில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix