Published : 01,Mar 2022 12:42 PM

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க களமிறங்கும் விமானப்படை விமானம் - மத்திய அரசு அதிரடி

Air-Force-plane-rescues-Indians-stranded-in-war-hit-nation-Ukraine-says-PM-Narendra-Modi

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வரும் மீட்புப் பணியில் இந்திய விமானப்படையின் விமானங்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-17 விமானம் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர உள்ளது. 

‘ஆபரேஷன் கங்கா’ மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்திய அரசு மீட்டு வருகிறது. மீட்புப் பணியை வேகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்த C-17 விமானம் அதிகபட்சமாக 77500 கிலோ எடையை சுமந்து செல்லும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் இந்த விமானத்தின் மூலம் அதிகளவில் இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வரலாம் என தெரிகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்