இந்திய ஆட்சிப்பணி தொடர்பான விதியில் திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய-மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டுகிறேன்" என தெரிவித்திருக்கிறார்
இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. (1/3) — TTV Dhinakaran (@TTVDhinakaran) January 22, 2022
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி