Published : 20,Jan 2022 11:34 AM
சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மெரினா காமராஜர் சாலையில், முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டோரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் இடையே நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில், ஆறு அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மயிலாப்பூர், ராயப்பேட்டை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தொடர்ந்து 22, 24ஆம் தேதிகளில் ஒத்திகைக்காகவும், குடியரசு தினமான 26ஆம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.