Published : 19,Dec 2021 02:01 PM

லண்டனில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு - பாடல் கம்போஸிங்குடன் ஷூட்டிங்?

Team-Naai-Sekar-Returns-heads-to-London

பாடல் கம்போஸிங்கிற்காக நாய்சேகர் ரிட்டன்ஸ் படக்குழு லண்டனுக்கு சென்றுள்ளனர்.

சுராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கான படிப்பிடிப்பு சென்னையில் அண்மையில் தொடங்கியது.

இந்நிலையில் படத்தில் பாடல் கம்போஸிங்கிற்காக படக்குழு லண்டன் சென்றுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்துக்காக புதுவகையான ட்யூன்களை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Naai Sekar Returns Motion Picture Starring Vaigaipuyal Vadivelu

மேலும், அண்மையில் வெளியான வடிவேலு மற்றும் சுராஜின் லண்டன் புகைப்படங்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. இன்னும் சிலவாரங்களுக்கு லண்டனில் தங்கியிருந்து பாடல்களுக்கு இசையமைக்கும் பணி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தின் கதை இரண்டு வெவ்வேறு பின்னணியில் அமைந்திருப்பதால், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் சில பகுதிகளை இயக்குனர் சுராஜ் லண்டனில் படமாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலுவை திரையரங்குகளில் பெரிய திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்