Published : 22,Aug 2017 12:56 PM
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அணிகள் இணைப்புக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு வருங்காலத்தில் நல்ல முன்னேற்றம் அடையும் என தான் நம்புவதாகவும் மோடி கூறினார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.