Published : 09,Nov 2021 06:49 PM

டெல்டா மாவட்டங்களில் நவ.10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Heavy-rain-warning-in-delta-districts-Holidays-for-school-colleges

டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chennai floods: Madras HC quashes PIL seeking postponement of CBSE exams |  Business Standard News

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்