Published : 20,Aug 2017 06:26 AM
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், நாளை நடக்கிறது

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.
அதிமுக அணிகள் நாளை இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து அந்தக் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கட்சியை வழி நடத்த குழு அமைத்து செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.