Published : 05,Oct 2021 01:51 PM
மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிரித்த நிலையிலும் காவிரி ஆற்றில் உபரி நீர்த்திறப்பு 7 ஆயிரத்து 100 கன அடியாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 86 கன அடியாக உயர்ந்துள்ள நிலையிலும், அணையிலிருந்து 3 ஆயிரத்து 600 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 592 கன அடியாக உள்ள நிலையில், 3 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனைப்படிக்க...அகிலேஷ், மாயாவதி எங்கே ?: உத்தரப்பிரதேச வன்முறை குறித்து பிரியங்கா காந்தி கேள்வி