[X] Close

தடுப்பு காவலில் துடைப்பம் கொண்டு அறையை சுத்தம் செய்யும் பிரியங்கா காந்தி - வீடியோ

வீடியோ ஸ்டோரி

உத்தரப்பிரதேசத்தில் வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலலில் வைக்கப்பட்டார்.

லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். லக்கிம்பூரில் பதற்றமான சூழலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் முயன்று வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளைச் சந்திக்க விரைந்த பிரியங்காவை லக்கிம்லக்கிம்பூர் எல்லையில் உள்ள வீட்டில் காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

image


Advertisement

இதனிடையே தடுப்புக்காவலில் தாம் வைக்கப்பட்ட அறை சுத்தமின்றி இருந்ததால் பிரியங்கா காந்தி, துடைப்பம் கொண்டு தாமே தூய்மை செய்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement
[X] Close