[X] Close

ஆப்கான்: பாகிஸ்தான் கொடியை கிழித்தெறிந்த தலிபான் அதிகாரிகள்- சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

உலகம்

Taliban-border-Security-Guards-tear-down-Pakistan-national-flag-which-flies-high-on-Aid-trucks-to-help-War-stricken-people-of-Afghanistan

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில், அந்த நாட்டின் நட்பு நாடான பாகிஸ்தான் நாட்டுக் கொடியை தலிபான் படையினர் சிலர் கீழித்தெறிந்துள்ள சம்பவம் விவாத பொருளாகி உள்ளது. அந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

image

என்ன நடந்தது?


Advertisement

தலிபான் மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான போரினால் பல்லாயிர கணக்கான மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிற்கதியாக செய்வதறியாது தவித்து வருகின்றார் ஆப்கன் மக்கள். அப்படி தவித்து வருபவர்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 17 சரக்கு லாரிகள் ஆப்கனுக்கு வந்துள்ளன.  

இரு நாட்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த தலிபான் படையினர் சிலர், பாகிஸ்தானில் இருந்து நிவாரணங்களை ஏற்றி வந்த வாகனத்தை மறித்து கொடிகளை அகற்றி உள்ளனர். அப்போது கொடிகளை கிழித்தும் உள்ளனர். அதன் பிறகு அந்த பகுதியில் குழுமியிருந்த தலிபான் பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள், கூக்குரல் எழுப்பியுள்ளனர். அப்போது பாகிஸ்தான் கொடியை எரிக்க வேண்டும் என தலிபான் பாதுகாவலர் சொல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

இந்நிலையில், இந்த பணியை செய்து தலிபான் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடன் தலிபான்கள் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது சர்ச்சையாகி உள்ளது. 

இதையும் படிக்கலாம் : நடராஜானுக்கு கொரோனா.. குவாரன்டைனில் வீரர்கள்: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்து என்ன நடக்கும்? 


Advertisement

Advertisement
[X] Close