Published : 12,Aug 2017 04:08 AM

வருகிறார் சுரேஷ் ரெய்னா!

Suresh-Raina-in-line-for-One-day-recall

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஒரு டி20 போட்டியிலும் விளையாட இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி, நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இடம்பிடிப்பார் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தோனியுடன் நேரம் செலவழிப்பது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்