[X] Close

பாக்கெட் வெடிகுண்டுகளை போல ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறுவது ஏன்? - விரிவான விளக்கம்

சிறப்புக் களம்

Why-do-smartphones-explode-like-pocket-bombs-A-Detailed-explanation

இன்றைய டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத சாதனம் என்றால் அது ஸ்மார்ட்போன். செல்லுலார் போனை உருவாக்கிய மார்ட்டின் கூப்பருக்கு கூட இந்த அளவுக்கு அந்த சாதனம் பல்வேறு மாற்றங்களை பெறும் என கணித்திருக்க மாட்டார். இப்போது ஸ்மார்ட்போன் என உலக மக்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ் கால், டெக்ஸ்ட் மெசேஜ் என வெவ்வேறு வடிவங்களில் கடல் கடந்து உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள உதவுவதால் இந்த பெயர் பெற காரணமாக இருக்கலாம். 


Advertisement

image

இருப்பினும் இப்போதெல்லாம் அடிக்கடி 'போன் வெடிக்கும்' செய்தியை பார்க்க முடிகிறது. பயன்பாட்டில் உள்ள பழைய போன் தொடங்கி சந்தையில் புதிதாக வாங்கப்பட்ட போன்கள் வரை வெடிப்பதாக அந்த செய்திகள் இருக்கின்றன. 


Advertisement

நம் பாக்கெட்டுகளிலும், கை பைக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பாக்கெட் வெடிகுண்டுகளை போல ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறுவது ஏன்? என்பதை விரிவாக பார்ப்போம். 

இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த செல்போன் தொழில்நுட்ப வல்லுநர் ஜோசப் அவர்களிடம் பேசினோம்.. 

“பொதுவாக செல்போன்கள் வெடிக்க சில காரணங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் பேட்டரியால் தான் நடக்கிறது. செல்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அந்த போன் இயங்க உதவும் Lithium-ion பேட்டரி பொருத்தும் போது ஏதேனும் தவறு செய்திருந்தால் போன்கள் வெடிக்க கூடும். 


Advertisement

image

அதே போல Physical Damage மாதிரியானவற்றாலும் போன் வெடிக்கலாம். தண்ணீரில் விழுந்த போனை ஸ்விட்ச்-ஆன் செய்து பயன்படுத்துவதால் கூட போன் வெடிக்கலாம். தண்ணீரில் விழுந்த போன் ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்புள்ளது. 

போன் கைதவறி கீழே விழுந்தது கூட போன்கள் வெடிக்க காரணமாக இருக்கலாம். கீழே விழுந்து போனின் பேட்டரி மற்றும் காம்பனென்ட்களில் ஏற்படும் மாற்றங்கள் போன் வெடிக்க காரணம். 

இப்போதெல்லாம் போன்களில் இடம் பெற்றிருக்கும் புராஸசர்கள் கூட போன்கள் வெடிக்க காரணம். இந்த இடத்தில் அந்த பேட்டரியின் சக்திக்கு மீறி அதன் செயல்திறன் மாறுபடும் போது போன் வெடிக்கிறது. 

அதே போல அதிக சக்தி கொண்ட ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்துவது, அதிக நேரம் சார்ஜ் செய்வது என போன் வெடிப்பதற்கான காரணங்கள் நீள்கிறது” என்கிறார் அவர். 

image

போன்கள் வெடிப்பதில் இருந்து தவிர்க்க முடியுமா?

“உற்பத்தி ரீதியிலான கோளாறு இல்லை என்றால் நிச்சயம் முடியும். உதாரணமாக போன்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என்றால் அது அதிகபடியாக சூடாகும். சில போன்களின் பேட்டரி Bulge (வீக்கம்) ஆகும். அதனால் கூட போன் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த மாதிரியான சமயங்களில் செல்போன் பழுது நீக்கும் கடைகளை அணுகலாம். அவர்கள் அதை பரிசோதித்து, அடுத்து செய்ய வேண்டியதை சொல்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்


Advertisement

Advertisement
[X] Close