[X] Close

ஒரே நாளில் 49 தமிழக மீனவர்கள் கைது

49-Tamil-Nadu-fishermen-arrested-in-one-day

இலங்கை கடற்படையால் இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டனர். 

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை, நாகை, ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களிடமிருந்து 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 படகுகளைச் சேர்ந்த 20க்கும் அதிகமான மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ளனர். நெடுந்தீவு, காரைநகருக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் நல்லெண்ண அடிப்படையில் 77 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்த நிலையில், இன்று ஒரே நாளில் 40க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close