Published : 08,Jul 2021 04:27 PM

25 ஆண்டுகளாக ஒரே மாதிரி உடை அணியும் வினோத நண்பர்கள்

Strange-friends-who-have-been-wearing-the-same-outfit-for-Past-25-years

கேரளாவில் உள்ள இரு நண்பர்கள் தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உடையை அணிவதை பின்பற்றி வருகின்றனர்.

ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தை சேர்ந்த ரவீந்திரனும் உதயகுமாரும் நெருங்கிய நண்பர்கள். தையல் கலைஞர்களான இருவரும் ஒரே மாதிரியான உடையை கடந்த 25 ஆண்டுகளாக அணிந்து வருகின்றனர். சட்டை, பேன்ட் தைக்க ஒரே துணியை வாங்கி அதைத் தனித்தனியாக தைத்து அணிந்து கொள்வதாக இருவரும் கூறுகின்றனர். தினமும் காலையில் அன்று என்ன உடை அணிவது என்பதை பேசி வைத்துக்கொண்டு அதே மாதிரி இருவரும் செயல்படுகின்றனர்.

image

இந்த வினோத நட்பை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்