ஐபிஎல் மாதிரியான டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷஹித் அஃப்ரிடி.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. அதனை விமர்சிக்கும் வகையில் தான் அஃப்ரிடி இதனை தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த அணி விளையாட உள்ளது.
“தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே தங்கள் வீரர்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதித்தது சர்பிரைஸ் தான். ஐபிஎல் மாதிரியான டி20 லீக் தொடர்கள் சர்வதேச போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் இதனை பரிசீலிப்பது அவசியம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.
குவின்டன் டி காக், நார்ட்ஜே, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ரபாடா மாதிரியான வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இரண்டு ஒருநாள் போட்டிகளை மட்டுமே விளையாடிய நிலையில் பிளைட் பிடித்துவிட்டனர்.
Surprising to see @OfficialCSA allowing players to travel for IPL in the middle of a series. It is sad to see T20 leagues influencing international cricket. Some rethinking needs to be done!! https://t.co/5McUzFuo8R — Shahid Afridi (@SAfridiOfficial) April 7, 2021
அஃப்ரிடி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார். இந்த அணிக்கு மாற்றாக தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகிறது.
Loading More post
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி