[X] Close >

'தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க மூக்குத்தி!'- குஜராத்தில் தனியார் அமைப்பு முன்முயற்சி

Goldsmith-Community-in-Gujarat-s-Rajkot-gives-freebies-like-Gold-Nose-pin-for-women-and-hand-blender-for-men-who-come-to-get-COVID19-Vaccine-doses-and-the-community-says-it-is-a-step-to-boost-the-Vaccination-drive-among-people-of-India

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கில் இலவசங்களை அறிவித்துள்ளனர். அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு கேக் மற்றும் முட்டையை அடிக்க உதவும் ப்ளெண்டர் (Blender) இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்காகவே தடுப்பூசி முகாமையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், இந்த அமைப்பின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

இதனிடையே, இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை 7,59,79,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close