தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தில் 'கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு கூட்டி வாருங்க' என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை பாடிய கிடாக்குழி புதிய தலைமுறைக்கு அதுகுறித்து பேசியுள்ளார். “ சின்ன வயசில் இருந்து நான் பாடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னோட 55 வயதிற்குப் பின்புதான் எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் புகழுக்கு காரணம் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரையே சேரும். இந்த புகழ் பத்து விருதுகள் கொடுத்தது போன்ற சந்தோஷத்தை நான் உணர்கிறேன். ‘அம்மா நீங்க பாடுனது வேற லெவல்ல இருக்கும்மா. நான் உங்களை அம்மாவா பார்க்காம ஒரு ஆடியன்ஸா பாக்குறேம்மா‘ என்று சொல்லி என்னோட பொண்ணு விடிய விடிய அழுதாள். அதை என்னால் தாங்கவே முடியல. அது என்னை மிகவும் பாதித்தது. ஏன்னா பொண்ணு எனக்கு உசுரு. பாட்டு நல்ல இருக்குன்னு எல்லோரும் வாழ்த்துனாங்க. ஆனா என் பொண்ணோட வாழ்த்துகளை அதிசயமா பாக்குறேன்.”என்றார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி