நீலகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியுடன் பழகிய, ஆண்டனி வினோத் என்ற நபர், திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கருவுற்றதால், மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இவ்வாறு பல முறை தொடர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆண்டனி வினோத்தை கைது செய்தனர். உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பளித்தார். 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள், கருக்கலைப்பு செய்ததற்கு 20 ஆண்டுகள், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி