பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இயங்கி வருபவர். சமயங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவார். கூடவே ரசிகர்களுடன் “கேள்வி - பதில்” செக்ஷன் நடத்தி அதற்கு பதிலும் கொடுப்பார்.
அந்த வகையில் அக்தர் நேற்று ட்விட்டரில் நடத்திய Q&A செக்ஷனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி அக்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள பதில் ஒவ்வொரு தோனி ரசிகரின் நெஞ்சத்தையும் வென்றுள்ளது.
“அந்த பெயரே ஒரு சகாப்தம்” என்பதுதான் அக்தர் தோனி குறித்த கேள்விக்கு சொன்ன பதில்.
“அவர் பெற்றிடாத வெற்றிகளே கிடையாது. ராஞ்சியை சேர்ந்த அவர் தந்து ஆட்டத்தால் இந்தியாவையே அசரடித்துள்ளார். அதை விட அவரது ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும். உங்களை என்றென்றும் கிரிக்கெட் உலகம் கொண்டாடும். இந்திய மக்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டார்கள்” என தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று ஒய்வு முடிவை அறிவித்தபோது அக்தர் தெரிவித்திருந்தார்.
Its the name of an era
— Shoaib Akhtar (@shoaib100mph) January 3, 2021Advertisement
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்