துரைமுருகன் சொத்துவிபரத்தை வெளியிட தயாரா என முதல்வர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு தற்போது துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி பகுதியில் நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது, “ திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள். இதையெல்லாம் அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது அவர்களை கண்டிக்க வேண்டும். சாயம் அடிப்பது யார் என்று அவர்களுக்கு தெரியும். கண்டிக்கும் அக்கறை இந்த அரசுக்கு கிடையாது”என்றார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்பது குறித்து அவர் கூறும் போது, “ நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும் அவரது உடல் நிலை, மனநிலை, சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துக்களையும் சொல்ல விரும்பவில்லை.” என்றார்
மேலும் ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பிய போது, “ரஜினிகாந்த் குறித்து பேசுவது முடிந்து போன ஒன்று” என்றார்.
துரைமுருகன் சொத்து விபரத்தை வெளியிட தயாரா என முதல்வர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது“என்னுடைய சொத்து மதிப்பு விபரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்க கோரி ஆளுனைரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுகவினர் டோக்கன் போட்டு, மந்திரி படம் போட்டு கொடுப்பதற்கு, இது என்ன அவர்கள் அப்பன்வீட்டா சொத்தா” என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் பதவிக்கு நான் ஆசைபடவில்லை முதலமைச்சர் கூறியது குறித்து கேட்டதற்கு "சர்வம் ஜெகத்மயாம்" என துரைமுருகன் கூறினார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!