பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போலீஸ் அதிகாரியின் முகத்தில், தேநீர்கடை வைத்திருந்த பெண் தேநீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (எஸ்.கே.எம்.சி.எச்) ஈஸ்டர் கேட் மற்றும் அருகிலுள்ள பிற இடங்களிலிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள் குறித்து மருத்துவமனையின் முதல்வர் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அப்பகுதியில் சட்டவிரோதமாக டீக்கடை வைத்திருந்த சரிதா தேவியிடம் விசாரித்தபோது, அவர் ஆத்திரத்துடன் காவல்துறை அதிகாரி சுமன் ஜா முகத்தில் கொதிக்கும் தேநீரை ஊற்றினார்.
பாதிக்கப்பட்ட காவல்துறை பொறுப்பாளர் உடனடியாக அவசர வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் உயர்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அஹியாபூர் காவல் நிலைய நிலைய அதிகாரி சுனில் ரசாக் கூறுகையில், "அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவரது கூட்டாளிகள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?