சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஆர்யா மெட்ரோ ரயில் நிர்வாகத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சென்னைவாசிகளின் நேரத்தை மிச்சப்படுத்தியதில் மெட்ரோ ரயில் சேவைக்கு பெரும் பங்குண்டு. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் மெட்ரோ ரயில் சேவைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், அரண்மணை 3 படத்தின் ஷுட்டிங்கிற்காக நடிகர் ஆர்யா சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு, நிர்வாகத்தைப் பாராட்டியுள்ளார். குத்துச்சண்டையை மையப்படுத்திய ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தில் நடித்து வருபவர், விஷாலுடன் இணைந்து 9 வருடங்களுக்குப் பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனாவிற்குப் பிறகு மெட்ரோ ரயிலில் அரண்மனை 3 ஷூட்டிங்கிற்காக பயணம். சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பாகவும் நன்கு சுத்தமாகவும் இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
Travel mode for the first time after Covid ??#MaskOn #ChennaiMetro safe and well sanitised ??????
Shoot time #Aranmanai3 ?????@khushsundar pic.twitter.com/xxqEZH7Yrp — Arya (@arya_offl) November 17, 2020
சுந்தர் சி இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. அதனைத்தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு ஆரண்மனை 2 வெளியானது. இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்க அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார், சுந்தர் சி.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு