ஒருபுறம் கடுமையான நோய் பாதிப்பும், மறுபுறம் மகள்களின் அன்புக் கட்டளையாலும் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களால் சர்வதேச அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ரஷ்ய சட்டப்படி அதிபர் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. ஆனால், இந்த சட்டம் புதினுக்காக வளைக்கப்பட்டது. செல்வாக்கு மிக்க நபராக ரஷ்யாவின் முகமாக மாறிப்போன புதின், ஜி ஜின்பிங்கை போல ரஷ்யாவின் நிரந்தர அதிபராக தீர்மானித்தார். அதன்படி, 2036 வரை புதின் அதிபராக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சமீபத்தில், ரஷ்ய மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடந்த வாக்கெடுப்பில் 77.93% மக்கள் புதின் 2036 வரை அதிபராக தொடர்வதற்கு பச்சைக்கொடி காட்டினர். இதனைத் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடருவார் என்று அறிவிப்பும் வெளியானது.
ஆனால், தற்போது விளாடிமிர் புதினின் உடல்நிலை கவலைக்குரியதாக உள்ளது. புதின் சமீபகாலமாக பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோயின் பிடியில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த நோயின் காரணமாக வெளியுலகில் முகம் காட்டுவதை தவிர்த்து வருகிறார் புதின். மேலும், தொடர்ந்து கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் கடுமையான வலியை உணர்கிறார் என அந்நாட்டு ஊடகங்களும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
நோயின் தொடர்ச்சியான தொந்தரவால் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக புதின் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. புதினின் இந்தக் கடினமான முடிவுக்கு பின்னணியில் இருப்பதாக கை காட்டப்படுபவர்கள் அவரின் இரு மகள்கள்தான்.
புதினுக்கு மரியா, கத்ரினா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள்தான் தந்தை நோயினால் படும் வேதனையை பார்த்து கட்டாயப்படுத்தி புதினை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளனர். மேலும், சில காலம் அவர் சிகிச்சையில் இருக்க வைக்க தேவையான ஏற்பாடுகளையும் கவனித்து வருகின்றனர். ஆனால், இந்த தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமில்லை.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னைப் போல் மர்மம் நிறைந்த மனிதர் புதின். ரஷ்யாவின் இரும்பு மனிதராக பார்க்கப்படுகிறார். இதற்கு முன் இதுபோன்ற பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. அப்போதெல்லாம் அதனை பொய்யாக்கி இருக்கிறார். தன்னை பற்றிய செய்திகள் கசியாத வண்ணம் ரஷ்யாவை ஒரு இரும்புத்திரை போர்த்திய நாடாக மாற்றியிருக்கிறார் என்றால் மிகையல்ல. அதனால், இந்த செய்தியை நம்புவதா வேண்டாமா என்று அவரின் நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் கண்கொத்தி பாம்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்துக்கிடக்கின்றன.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?