காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக காவலர் மீது இளம்பெண் புகார்

Policeman-and-his-parents-complain-that-he-cheated-on-his-girlfriend-by-getting-pregnant-----

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காதலித்த பெண்ணை ஏமாற்றியதாக காவலர் மற்றும் திருமணம் செய்துவைக்க மறுப்பதாக காவலரின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி வட்டம் நரிக்குடியை அடுத்துள்ள நல்லதரை கிராமத்தைச் சேர்ந்த ஷண்முகம், சாந்தகுமாரி தம்பதியரின் மகன் திருமுருகன் (27). இவர் மதுரை சிறப்புக் காவல்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். 

image


Advertisement

இவரும் அதே ஊரைச்சேர்ந்த இவரது அத்தை மகள் வனிதா (21) இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கிப் பழகியதால் வனிதா கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வனிதா தான் கர்ப்பமடைந்திருப்பதை காவலர் திருமுருகனிடமும் அவரது பெற்றோரிடமும் எடுத்துக்கூறி தங்களுக்கு திருமணம் செய்துவைக்க கோரிய நிலையில் திருமுருகனும் அவரது பெற்றோரும் திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகவும் மனமுடைந்த வனிதா திருமுருகன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாகவும், திருமுருகனின் பெற்றோரும் திருமணம் செய்துவைக்க மறுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

image


Advertisement

வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் திருமுருகன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement