தூத்துக்குடி: ரத்த தானம் செய்தார் கனிமொழி எம்.பி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ரத்ததான முகாமை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்து முகாமில் கலந்து கொண்டவர்களை பாராட்டினார். 


Advertisement

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரத்ததான முகாம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்து ரத்த தானம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

தொடர்ந்து ரத்ததானம் அளிக்க முன்வந்த தன்னார்வலர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திமுக தொண்டர் அணி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். 

image

முன்னதாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் ரூ.18.50 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சண்முகையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மனு அளித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement