6 சீசன்களுக்குப் பிறகு ஹாட்ரிக் தோல்வி கண்ட சிஎஸ்கே..!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல்லில்  ஆறு சீசன்களுக்குப் பிறகு சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றது இதுவே முதல் முறை.


Advertisement

புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அணிகளின் புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடங்களை அலங்கரித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.


Advertisement

image

4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய வெற்றி மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement