இன்று ராஜஸ்தான் - கொல்கத்தா பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?

Strength-and-Weakness-of-kolkata-knight-riders-vs-rajasthan-royals

ஐபிஎல் போட்டியில் இன்று களம் காணவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் பலம் பலவீனம் பார்க்கலாம்


Advertisement

விளையாடிய இரு போட்டிகளிலும் 200 ரன்களுக்கும் மேல் விளாசி அபார வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. பேட்டிங்கில் கேப்டன் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக பார்க்கப்படுகின்றனர். நடப்பு சீசனில் சஞ்சு சாம்சன் 159 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 119 ரன்களும் விளாசியுள்ளனர். ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியா அணிக்கு புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார்.

image


Advertisement

பந்துவீச்சில் வேகப்புயல் ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டும் வலுசேர்த்து வருகிறார். உனத் கட், டாம் கரண், ராஜ்பூத் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பலவீனம். ராஜஸ்தான் இது வரை விளையாடிய இரு போட்டிகளும் ஷார்ஜாவில் உள்ள சிறிய மைதானத்திலேயே அரங்கேறியது. இன்றைய போட்டி துபாயில் நடைபெறுகிறது என்பதால், அந்த அணி இமாலய ஸ்கோர்களை விளாசுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் விளையாடிய இரு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. மேல்வரிசையில் சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ரானா நம்பிக்கையளிக்கின்றனர். மூத்த வீரர் இயான் மார்கனும், ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

image


Advertisement

சுனில் நரைன் எதிர்பார்த்த அளவு ஓபனிங்கில் சோபிக்காமல் இருப்பதும், கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடி அரக்கன் ரசல் ஆகியோர் பெரிய ஸ்கோரை விளாச தவறியுள்ளது அணிக்கு பின்னடைவே. ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆறுதலளிக்கும் ஃபார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை சரிக்க திணறி வருவதும் அணிக்கு பின்னடைவே.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement