"மற்ற அணிகள் போலதான் சிஎஸ்கேவும்"- ரோகித் சர்மா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் போட்டியில் இருக்கும் வேறு அணிகள் போலதான் எங்களுக்கு சிஎஸ்கேவும் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement

அபுதாபியில் 13-ஆவது ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகிறது. இந்நிலையில் போட்டி குறித்து ரோகித் சர்மா பேசிய வீடியோவை மும்பை இண்டியன்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்திருந்து அதில் "சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நான் சிஎஸ்கேவை ஐபிஎல்லில் விளையாடும் மற்ற அணிகளைப் போலவே கருதுகிறேன்" என்றார்.

image


Advertisement

மேலும் அந்த வீடியோவில் பேசியுள்ள ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா "மும்பை - சென்னை போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க காரணம் இல்லாமல் இல்லை. இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. அதனால்தான் இந்த இரு அணிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனினும் நாங்கள் சென்னைக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சிப்போம்" என்றார்.


Advertisement

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறும்போது "சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்துவது எளிதானதல்ல. அதற்காக மும்பை அணி திறம்பட தயாராகி இருக்கிறார்கள். மும்பை அணியின் ஒவ்வொரு வீரர்களும் சவாலுக்கு தயாராகவே இருக்கிறார்கள். போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement