ரெய்டில் இருந்து தப்பிக்க போலீஸை தனது நாயை விட்டு துரத்தும் மதுபான வியாபாரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத் மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரபி நஹாக். இவர் கோடாலா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோழி இறைச்சி மற்றும் மதுபான விற்பனை செய்து வந்தார். கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கை கடைபிடிக்காமல், அத்துமீறி நடத்துவதாக இவர் பேரில் புகார் வந்துள்ளது. இதனால் அவர் வீட்டில் சோதனை நடத்த காவல்துறை முடிவெடுத்தனர்.


Advertisement

அதன்பேரில், சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் போலீஸார் விசாரணை நடத்தியபோது நஹாக்கும் அவரது மகன்களும் போலீஸார்மீது கற்களை வீசியதுடன் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கடையை போலீஸார் தேடத் தொடங்கியபோது, நஹாக் தனது செல்ல நாயான லாப்ரடோர் இன நாயை அனுப்பியுள்ளார். அது போலீஸ்கார்களை நோக்கிக் குரைக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அவர்களை கடையின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

image


Advertisement

குற்றம் சாட்டப்பட்ட அந்த நாய், இரண்டு கான்ஸ்டபிள்களின் கையை கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது. முன்னதாக அந்த நாய் உள்ளூரிலேயே சிலரைக் கடித்ததாக கிராமவாசிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதனால் அந்த நபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றம் தொடர்பான பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement