"நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் ரெய்னா" -வாட்சன் உருக்கம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி மிஸ் செய்யும் என்று சக வீரரான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் துபாய்க்கு சென்று இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் சிஎஸ்கே வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதனையடுத்து சிஎஸ்கே அணிக்கான தனிமைப்படுத்துதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்" என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

image

இது குறித்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் தன்னுடைய சமூக வலைத்தள பதிவில் "நான் உங்களை நினைத்துக்கொண்டு இருக்கிறேன் சுரேஷ் ரெய்னா. உங்கள் நினைப்பும், உங்களுடன் குடும்பம் குறித்த எண்ணங்களும் எப்போதும் இருக்கும். சென்னை அணி நிச்சயம் உங்களை மிஸ் செய்யும். நீங்கள் எப்போதும் அணியின் இதயத்துடிப்பாக இருந்துள்ளீர்கள். அதனால் உங்களை பெருமைப்படுத்துவோம். நலமுடனும் பாதுகாப்புடனும் இருங்கள்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement