ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்பி டார்ச்சர் கொடுத்து வந்த வாலிபரை நேரில் வரவழைத்து போலீசிடம் சிக்க வைத்துள்ளார் சென்னை பெண் ஒருவர்!
 
சென்னை, அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் 55 வயதான பெண் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களில் ஒரு மகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் சுனிதாவுடன் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஆகஸ்ட் 4-ம் தேதி மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. அதன்பின், அந்த நபர் தகாத முறையில் பேசி வந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, பல்வேறு எண்களில் இருந்து அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு தொந்தரவு செய்துள்ளார்.
 
பின்னர், 4 நாட்கள் கழித்து திடீரென்று அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
 
அப்போது தான் ஒரு அதிரடி திட்டத்தை குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அந்த நபரிடம் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும், அவருடன் பேச விரும்புவதாகவும் இந்த பெண் ‘ஆசை’ வார்த்தை கூறியுள்ளார்.
 
அதை நம்பி அவரும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த குடும்பத்தினர் அவருக்கு தர்மஅடி கொடுத்து மடக்கிப் பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த நபரை கைது செய்தனர்.
 
image
விசாரணையில், அவர் திருத்தணியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்தது. இவர் ஐடிஐ படித்துவிட்டு ஆன்லைன் டெலிவரி பாயாக வேலை பார்த்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது. தற்போது விமல்ராஜின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார்
 
மேலும், விமல்ராஜ் மொபைல் எண்களை எதேச்சையாக அழைத்து பேசுவதும், அவர் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில், அவரை பாலியல் தொந்தரவு செய்வதும் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
loading...
Related Tags : sexual harassment சென்னை

Advertisement

Advertisement

Advertisement