பக்ரீத் தினத்திலும் கொரோனாவால் இறந்தவர் உடல்களை அடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ. தன்னார்வலர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று, பக்ரீத் தின கொண்டாட்டங்களை தவிர்த்து நல்லடக்கம் மற்றும் தகனம் செய்து தங்களது மனிதநேய சேவையை வெளிப்படுத்தியுள்ளனர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்.
 
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த கடையநல்லூரை சேர்ந்த 60 வயது பெண்ணின் உடலை, உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்  நல்லடக்கம் செய்தனர்.
 
அதேபோல் கொரோனாவால் உயிரிழந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவரின் உடலைப் பெற்று, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள், கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர் .
 
பக்ரீத் ‌பெருநாள் என்று கூட‌ பாராமல் எஸ்.டி.பி.ஐ. தன்னார்வலர்களின் இந்த மனிதநேய சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
loading...

Advertisement

Advertisement

Advertisement