ரெய்னாவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என தோன்றவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்
சிறந்த இடதுகை மட்டையாளர், சிறந்த பீல்டர் என தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் ரெய்னா. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறவில்லை இவர். 2018ம் ஆண்டுக்கு பிறகு ரெய்னா இந்திய அணியில் இடம்பெறாததற்கு அவர் பிட்னெஸ் முக்கிய காரணமாக இருந்தது. உடல் எடை கூடிய ரெய்னா மீண்டும் சரியான பாதைக்கு திரும்பவதற்குள் ரெய்னா இடத்தை ஷ்ரேயாஸ் ஐயர் நிரப்பினார்.
அதன் பின்னர் அப்படி இந்திய அணி சென்றுகொண்டிருக்க ரெய்னா காத்திருக்கிறார். ஆனால் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று பந்துகளை நாலாபுறமும் சிதறடிப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் ரெய்னாவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என தோன்றவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியில் ரெய்னாவின் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதுகிறேன்.
சர்வதேச அளவில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் பூஜ்யம் தான். ரெய்னா சிறந்த கிரிக்கெட் வீரர். இதுவரை உலகம் கண்ட இந்திய அணியின் ஒரு சிறந்த பீல்டர். ஆனாலும் கோலி தற்போது தன்னுடைய அணியின் மிடில் ஆர்டரில் இளைஞர்களை நிரப்பவே விரும்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!