Advertisement

“ஆத்திரத்தில் செய்தேன்” - நாயை சாக்குப்பையில் போட்டு அடித்துக்கொன்ற நபர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் நாயை சாக்குப்பையில் போட்டு அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையம் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவர் துரைராஜ். இவர் கடந்த 24-ஆம் தேதி காலை 11 மணியளவில் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை சாக்குப்பையில் பிடித்து போட்டு சாலையிலேயே அடித்து கொடூரமாக கொன்று நாயை குப்பைத் தொட்டியில் வீசியதாக புளுக்கிராஸ் அமைப்பிற்கு புகார் வந்துள்ளது.

image


Advertisement

இந்த புகாரின் பேரில் புளுகிராஸ் அமைப்பை சேர்ந்த சிறப்பு மேலாளர் வேலு என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பீர்க்கன்கரணை போலீசார் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1960 கீழ் வழக்குப்பதிவு செய்து துரைராஜ் என்பவரை கைது செய்தனர்.

image

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நாய் தன் மனைவியை கடிக்க முயன்றதால் ஆத்திரத்தில் அடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். பின்னர் நாயை வீசிச் சென்ற இடம் குறித்து கேட்டறிந்து போலீசார் நாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட துரைராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

 

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement