சேலத்தில் கணவனை கொன்ற மனைவி அதே வீட்டில் ஒருவாரம் வசித்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராஜகிரி-பூங்கொடி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகள் பருவமடைந்த காரணத்தால் கணவனோடு சேர்ந்து வாழும் முடிவோடு பூங்கொடி வந்ததாகவும், இருப்பினும் அவ்வப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 18 நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் இருவரும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பூங்கொடி ராஜகிரியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட்டு, ஒரு வாரமாக அந்த வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். ராஜகிரி வெளியூர் சென்றிருப்பதாக பிள்ளைகள் மற்றும் உறவினரகளிடம் பூங்கொடி கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூங்கொடியும் தலைமறைவானார்.
பின்னர், பூங்கொடியின் மகள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது கழிவறை அருகே ஒரு இடத்தில் பழைய பொருட்கள் அடுக்கி வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் மூலம் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ராஜகிரியின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள பூங்கொடியை தேடி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!