JUST IN

Advertisement

புதுக்கோட்டையில் 50 பேருக்கு கொரோனா - மாவட்ட ஆட்சியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு 50-ஐ தொட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

image


Advertisement

ஜூன் 30 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிர் உயிரிழந்துள்ளார். இன்னும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.”எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement