[X] Close

‘புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வாங்கக்கூடாது’ - உச்சநீதிமன்றம் 

Subscribe
The-Supreme-Court-has-ruled-that-travel-fees-should-not-be-collected-from-migrant-workers
 
 
புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவில் பொது முடக்கம் காரணமாகச் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், வேலையும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். பலர் இன்னும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். 
 
Image
 
இதைத்தொடர்ந்து பொது முடக்கத்திற்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்களை மாநில அரசுகளின் அனுமதியோடு மத்திய அரசு இயக்கியது. இவ்வாறு இயக்கப்பட்ட ரயில்களில் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது. 
 
Image
 
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநில அரசோ அல்லது சென்று சேரும் மாநில அரசோ ஏற்பதாகக் கூறியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் குடிநீர் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 187 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் 1.85 பேர் சொந்த ஊர் திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Image
 
இதுதவிர அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாள்தோறும் 3.36 லட்சம் பேர் என்ற கணக்கில் இதுவரை மொத்தம் 47 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்குச் சாலை போக்குவரத்து வழியாக அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த வாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது; அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவுகளைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close