கோவையில் மது போதையில் காவல்துறை உதவி ஆய்வாளரைத் தாக்கிய பெண் காவலரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் அருகே முருகேஷ் என்பவரது தோட்டத்தில் இரண்டு பேர் அமர்ந்து மது குடிப்பதாகவும், அப்பகுதியில் சாலையில் செல்வோரிடம் அவர்கள் தகறாறு செய்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் என்பவரை போதையில் இருந்த நபர் தகாத வார்த்தையில் பேசியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் உதயகுமார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார், மதுபோதையில் இருந்த வாலிபரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மது போதையில் இருந்த வாலிபர் போத்தனூரை சேர்ந்த மதன்குமார் என்பதும் அவர் பெண் காவலர் ஒருவரின் கணவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மதன்குமாரை கைது செய்த போலீஸார், அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’