குடை பிடித்து வந்தால் மட்டுமே மதுபானம் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
குடை பிடித்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் வருகின்ற 7 ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கான நிபந்தனைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் , கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதோடு குடையுடன் வந்து , குடைபிடித்து நின்றால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்றும், இல்லையெனில் மதுபானம் வழங்கப்படாது என்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 
image
 
மேலும் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஒரு அறிக்கையில்,  “கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 17.05.2020 வரை முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டிருப்பதால் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
 
image
 
இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே திருப்பூர் மாவடத்தில் வரும் 07.05.2020 முதல் மதுபானக் கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ( containment zones ) உள்ள மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாடு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும்  07.05.2020 முதல் திறக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் திறக்க அனுமதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
image
loading...

Advertisement

Advertisement

Advertisement