முதல்வர் நிவார‌ண நிதிக்கு இதுவரை ரூ.1‌34 கோடி நன்கொடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தடுப்பு‌ மற்றும் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 134 கோடியே 63லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்கிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அதிகளவாக அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் 14 கோடியே 10லட்சத்து‌ 72ஆயிரத்து 492 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு, ஹூண்டாய் மோட்டார் ஆகியவை தலா 5 கோடி நிதி ‌வழங்கியுள்ளன. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகியவை தலா 2 கோடியும் அளித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், காமராஜர் துறைமுகம், eicher குரூப் மற்றும் அதிமுக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement