JUST IN

Advertisement

ஊரடங்கு உத்தரவுக்கிடையே சடங்கில் பங்கேற்றாரா யோகி ஆதித்யநாத் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அயோத்தியா ராமர் கோயில் சடங்கில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை நேற்றிரவு பிரதமர் மோடி பிறப்பித்தார். இதனால் அனைத்து மாநில அரசுகளும் மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக கண்காணிக்க அனைத்து முதலமைச்சர்களும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அதில் அயோத்தியாவில் உள்ள தற்காலிக ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் பூஜை இன்று அதிகாலை நடந்ததாகவும், அதில் 20க்கும் மேற்பட்டோருடன் யோகி ஆதித்யநாத் பங்கேற்றதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டிருக்கும் நிலையில் ஒரு முதலமைச்சரே இப்படி உத்தரவினை மீறுவது சரியா ? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

image

இதற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், தன்னைப் பற்றி பகிரப்படும் புகைப்படங்கள் சிவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் எடுக்கப்பட்டவை என மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கயிருந்ததாகவும், தற்போது இருக்கும் நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

image

இந்த தகவல் ஒருபுறம் இருக்க ஊரடங்கு உத்தரவினை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக மற்றொரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அதில் யோகி ஆதித்யநாத் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சூழ நின்று பேசிக்கொண்டிருக்கிறார். யோகி உட்பட அந்தக் கூட்டத்தில் பலரும் முகக்கவசம் அணியவில்லை. இந்த தகவலை பத்திரிகையாளர்கள் சிலர் கூட தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

சமூக விலகலை கடைபிடித்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement