[X] Close >

உங்கள் சைக்கிளை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லலாம் - சென்னை மெட்ரோவின் அசத்தல் அறிவிப்பு

Chennai-Metro-allows-a-bicycle-in-trains

பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்லும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.


Advertisement

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நேரத்தில் எதிர்பார்த்த அளவு வருவாய் இல்லை என்றும், பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அடுத்தடுத்து பல்வேறு வசதிகளை கொடுத்து வருவதன் மூலம், மக்களிடையே படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை வரவேற்பு பெற்று வருகிறது. வாடகை கார், share taxi சேவைகளும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

image


Advertisement

இந்நிலையில் பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்லும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வாகனம் இல்லா போக்குவரத்து திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மிதிவண்டியை கொண்டு வருவோர் முதல்வகுப்பில் பயணிக்க வேண்டும் என்பன போன்ற சில விதிமுறைகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் முடிந்தவரை அடக்கமான சிறிய சைக்கிளை பயன்படுத்துமாறும் மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

image


Advertisement

இத்திட்டத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதோடு காற்றுமாசு ஏற்படுவதையும் குறைக்க முடியும் எனக் கூறுகிறார்கள் பயணிகள். அத்துடன் குறைந்தநேரத்தில் பயணிக்க முடிவதாக அலுவலகங்களுக்குச் செல்வோர் தெரிவிக்கின்றனர்

இந்தியாவின் மற்ற எந்த மெட்ரோ ரயில்களிலும் இல்லாத சிறப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... நெகிழ வைத்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close