முன்னிலையில் ஆம் ஆத்மி...! மீண்டும் அரியணை ஏறும் அரவிந்த் கெஜ்ரிவால்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.


Advertisement

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்த‌ல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது.

image


Advertisement

மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..! 

இதைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

சிஏஏ அலை ஓய்வதற்குள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கிறதா பாஜக?

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 54 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரியணையில் ஏற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement